Tuesday, October 26, 2010

எந்திரனுக்கு சவால்

தலைப்பிறகும் இந்த படத்திறகும் என்ன சம்மந்தம்-னு நினைக்கிறீங்களா? எல்லாரும் எந்திரனைப் பற்றி எழுதிட்டாங்க. நானும் ஏதாவது என் பங்குக்கு எழுதனும்ல அதான், எந்திரன் வசூல் ரீதியா வெற்றியடந்த ஒரு திரைப்படம். ஆனால் எத்தனை நாள் அந்த படம் ஓடும்னு நினைக்கிறீங்க?  150 நாள்? 175 நாள்? 200 நாள்? அல்லது ஒரு வருடம்? அதுவும் ஒரே திரையரங்கில்? முடியுமா? மக்கள் மனதில் எத்தனை நாள் எந்திரன் நிலைத்திருக்கும்? 


ஆனால் ஒரு படம் வெளியான நாள் முதலா இன்றுவரை ஒரே திரையரங்கில்தொடர்ந்து 15 வருடங்களாக வெற்றிநடை போட்டு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன படம்-னு உங்க எல்லாருக்குமே தெரியும்னு நினைக்கிறேன். அந்த படம் "Dilwale Dulhania Le Jayenge". 



15 வருடங்களுக்கு முன்பு 20-10-1995 -ல் மும்பை மராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் இன்றும் தொடர்ந்து அதே திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. இந்த மாதம் 21-10-2010 தனது 15 வது வருடம் மற்றும் 783 வாரங்களை நிறைவு செய்துள்ளது. தினமும் காலை 11:30 காட்சியாக இன்றும் திரையிடப்படுகிறது.


வருகின்ற ஜனவரி 2011-ல் தனது 800 வது வாரத்தை நிறைவு செய்கிறது. இதுதான் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.


தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டும், DVD-களாக வெளியிடப்பட்டும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த திரைப்படத்தின் சென்ற வார வசூல் 20000. 


இந்த அளவிலான சாதனையை எந்திரனால் படைக்க முடியுமா? மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பதுதானே சாதனை? அப்போ இது எந்திரனுக்கு சவாலான திரைப்படம்தானே?


இந்த படம் இந்த அளவுக்கு வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்க என்ன காரணம்னு நீங்க நினைகிறீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.


குறிப்பு: இது எந்திரனுக்கு எதிரான பதிவு அல்ல. எதிரானதுன்னு நீங்க நினைச்சா நினைச்சிட்டு போங்க. அதைப்பற்றி எனக்கு கவலை இல்ல. நான் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதிகிட்டே இருப்பேன்.

9 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிச்சயமாக இது மறுக்க முடியாத ஒரு சாதனை தான்.... யாப்பா 15 வருசமா !!!! நம்பவே முடியல...

Unknown said...

ஏங்க...இந்த படத்த இணைச்சு பேச வேற படம் கிடைக்கலையா ?
'பேசும் படம்' என்கிற பேசாத படம் - எனது சாய்ஸ்....
கமலுக்காக இல்ல...இரைச்சலே இல்லாம ஒரு இரண்டு மணி நேரம் ரசிக்கக் கூடிய ஒரே படம்.....(எனக்கு பிடிச்சதச் தான் சொல்றேன்..இது கமலுக்கு பிடிக்குமான்னு நீங்க அவருதான் கேட்கணும்)

Unknown said...

இந்தப்படம் ரிலீசப்ப நிறையப்பேர் பிறந்தே இருக்க மாட்டாங்க...
அப்போ பிறந்த ஒரு குழந்தை...
இதை வருடம் ஒருமுறை பார்த்தால் கூட 15 முறை....
அத விடுங்க...வருடம் ஒரு படம் குழந்தையா (பேபி ஷாலினி மாதிரி)
நடிச்சிருந்தா....15 படம் !...
ஷப்பா..
ஷாருக்.. சாருக்கு..தான்
இப்போ வரையில் அவர் தான் டாப் கலெக்ஸ்சன் ரெகார்ட் இந்திய நடிகர்...200 கோடி பட்ஜெட்டில் அவரை மட்டுமே நம்பி எடுக்க முடியும் ...

Ramesh said...

கலக்கல் நான் கூட எதோ சாதனைக்காக ஓட்டிட்டிருக்காங்கன்னுதான் நினைச்சிருந்தேன்.. ஆனா போனவாரம் கூட 20000 வசூல் பண்ணியிருக்குன்னா சாதனைதான்..

Unknown said...

வாங்க ஆகாய மனிதன்...
//ஏங்க...இந்த படத்த இணைச்சு பேச வேற படம் கிடைக்கலையா ? //
ஏதோ எனக்கு தெரிஞ்சத நான் எழுதினேங்க. உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி மனிதா. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

வாங்க ரமேஷ் வணக்கம். சாதனைக்காக இல்லீங்க ரமேஷ். குடும்பத்தோட ரசிச்சு பார்க்கக்கூடிய படம். நீங்களும் ஒருமுறை பாருங்க... விமர்சனத்தை பதிவா போடுங்க.

Kousalya Raj said...

நான் இதுவரை 10 முறை பார்த்து விட்டேன்......ஆனால் இப்ப பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் தான் தோன்றுகிறது....சாதனை படைக்கிறது இன்னும்....

Unknown said...

நீங்க தாராளமா உங்க இஷ்ட்டப்படி எழுதுங்க, ஆனாலும் 15 வருஷத்துக்கு முன்னாடி வந்த படத்தோட ஒப்பிட உங்களுக்கு எந்திரன் படம்தான் கிடைச்சிருக்குன்னா, எந்திரன் ஒரு சாதனை படம்தான?

Unknown said...

//எந்திரன் ஒரு சாதனை படம்தான//
ஆமாங்க...ஆமா !!!

Post a Comment