Monday, January 31, 2011

இதற்கு பெயர்தான் காதலா???? 18+

இன்னைக்கு தினமலர் இணையதளத்துல நேற்றைய வாரமலர் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஒரு அதிர்ச்சியான கேள்வி. அது என்னன்னா காதலித்தவனையே கல்யாணம் பண்ணட்டுமா? இல்ல அவ வீட்டுல பார்த்திருக்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கவா? அப்படின்னு ஒரு பொண்ணு கேள்வி கேட்டுருக்கா. அதுக்கு சகுந்தலா கோபிநாத் அப்படின்னு ஒரு அம்மா அவளுக்கு அறிவுறை சொன்னதையும் கீழே கொடுத்துள்ள இணைப்புல போய் படிச்சு பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.  
இதற்கு பெயர்தான் காதலா????
தமிழ் கலாச்சாரம் எங்கேயோ போயிகிட்டிருக்கு. கலாச்சார காவலர்கள் என்ன பன்ணிகிட்டிருக்காங்க?????



Friday, January 21, 2011

விடுமுறைப் பயணம் - அசோகா அல்வா, பொங்கல், கல்லணை

வணக்கம் நண்பர்களே!
எல்லோரும் பொங்கல் விடுமுறையை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள். நானும் நல்லபடியா கொண்டாடலாம்னுதான் திருப்பூரிலிருந்து என் சொந்த ஊரான (சொந்தமா ஊருவச்சிருக்குற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல) தஞ்சை மாவட்டத்திற்கு என்னோட டிஸ்கவர் டிடிஎஸ்-எஸ்ஐ வண்டியில கிளம்பிட்டேங்க. என்ன என் வண்டி 90 கி.மீ ஸ்பீடுக்கு மேல போகாது. இங்க திருப்பூர்-ல பஸ் கிடைச்சி நான் ஊரு போயி சேரும்போது பொங்களே முடிஞ்சிருக்கும் . அவ்வளவு க்ரவ்டு. அந்த இத்துப்போன கவர்மெண்ட் பஸ்ஸுல ஏற்றதுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு க்யூ-ல நிக்கனும். அதிலயும் இந்த போலிஸ்காரங்க தான் எல்லாரையும் பஸ்ஸுல ஏற்றிவிடுவாங்க. யாராவது முன்னடியே இடம் பிடிச்சி ஏறி வந்தா அவங்களையும் இறக்கிவிட்டு மறுபடியும் க்யூ-ல நிக்க வச்சிடுவாங்க, எனக்கென்னவோ இவ்ங்க இந்த மாதிரி கெடுபிடி பண்ணாம இருந்தாலே க்ரவ்டு இருக்காதுன்னு நினைக்கிறேன். கிடைக்கிற பஸ்ஸுல ஏறி போயிகிட்டே இருப்பாங்க. க்யூ-ல நின்னா 5 மணி நேரத்துக்கு மேல ஆகும் பஸ் ஏற. அது வரைக்கும் பஸ் ஸ்டாண்டுலேயே நிக்க வேண்டியதுதான். 
அப்படியே இடம் கிடைச்சி ஏறி உட்கார்ந்தா அப்போ பார்த்து இந்த லேடிஸ் நம்மகிட்ட வந்துதான் தம்பி கொஞ்சம் எழுந்துக்கங்களென் கை குழந்தையோட இருக்கேன், இல்லனா மயக்கமா வருது நிக்க முடியல அப்படின்னு சொல்லி இடம் கேட்பாங்க. எனக்கு ஒன்னு மட்டும் புரியல! பஸ்ஸுல அத்தனை பேரு இருந்தும் அந்த லேடிஸ் பொண்ணுங்ககிட்டயோ மற்ற லேடிஸ்கிட்ட இடம் கேட்கறதே கிடையாது. கரெக்டா பாய்ஸ் & ஜென்ஸ் கிட்டதான் கேட்கிறாங்க. நம்மாளுங்களூம் உடனே இடம் கொடுத்துடுறாங்க, ரொம்ப தாராள மனசு!!!! நாமளும் அதையே தான் பண்ணுவோம். எதுக்கு இந்த வேண்டாத வேலை அப்படின்னுதான் வழக்கம் பைக்-லேயே கிளம்பிட்டேன்.
நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துக்கு போறதுக்கு பைக் தாங்க வசதியா இருக்குது. போகும்போதே எங்க பொங்கலும் அதுவுமா போயி சேர்ந்துவோமோ அப்படிங்கிற பயத்தோடதான் போனேன். ஏன்னா என்கிட்ட ஹெல்மட் கிடையாது. நானும் அதை வாங்கற ஐடியாவே இல்ல. அத போட்டா சைடுல வற்ற வண்டிங்களும் தெரியாமாட்டுது, சைடுல போற பொண்ணுங்களும் தெரிய மாட்டுது. குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரியே போக வேண்டியதா இருக்கு. அதான் ஹி! ஹி!!. ஹெல்மட் போடுங்க அதான் உயிருக்கு சேஃப்டி-ன்னு சொல்லாதீங்க. ஹெல்மட் போட்டுகிட்டே நிறைய பேரு சாகுறாங்க. போனதடவ ஊருக்கு போகும்போது குளித்தலைக்கு அப்பறம் ஹெல்மட் போட்டு போன பையன் எதிரே வந்த லாரி மோதினதுல ஹெல்மட்டோட கழுத்து முறிஞ்சு போச்சு. 108 - ல கொண்டு போனாங்க பிழைச்சானா செத்தான தெரியல. 10 வது மாடியிலேர்ந்து குதிச்சு பிழைச்சவனும் இருக்கான், புல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு. நாம போகனும்னு இருந்தா போயிதானே ஆகனும்னு போனா போற வழியில எல்லாம் கண்ணாடி துகள்களா இருக்கு. சில இடங்கள்ல இரத்தம் உரைஞ்சு போன தடங்களா இருக்கு. கரூர் வரைக்கும் எப்படியோ போயாச்சு. கரூர் டூ திருச்சி போறதுதான் கஷ்டம், ஏன்னா பல வருஷமா ரோடு போட்டுகிட்டே இருக்கானுங்க இதுவரைக்கும் முடிக்கல. அப்படியேதான் இருக்கு மாற்றங்கள் ஒன்னும் தெரியல.
                                      
என்னோட ஊரு தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டுல நெடுந்தெரு அப்படின்னு ஒரு கிராம. அதனால நான் எப்போதுமே கல்லணை போயி அங்கிருந்து திருவையாறு - கும்பகோணம் ரோட்டுல கணபதி அக்ரஹாரம் போயி அப்படியே அய்யம்பேட்டை வழியா வீட்டுக்கு போயிடுவேன். நேரமும் மிச்சமாகும், குறைவான தூரம், நோ ட்ராஃபிக். ஒரு வழியா திருச்சி போயி சேர்ந்தாச்சு.  சத்திரம் பஸ் ஸடாண்டு வழியா சென்னை பை-பாஸ் ரோட்டை க்ராஸ் பண்ணினா கல்லணை ரூட் வந்திடும்னு போனா பய புள்ளைக திடீர்னு அங்க ஃப்ளை ஓவர் கட்ட ஆரம்பிச்சு வழியே இல்லாம பண்ணிட்டானுங்க. 
எனக்கு வேற ரூட் தெரியாது. அங்க உள்ள சில பேர்கிட்ட வழி கேட்டு போனா தலையும் புரியல வாழும் புரியல. எல்லாமே சின்ன சின்ன சந்தா இருக்கு. தட்டு தடுமாறி வழிமாறி போயிட்டேன். மறுபடியும் அங்க உள்ளவங்ககிட்ட கேட்டா அவங்க ஒரு வழிய காட்டி அதுல போக சொன்னாங்க. அதுலேயும் குழம்பி போயாச்ச்சு. சரி போற வரைக்கும் போவோம்னு போனேன் அப்போ எனக்கு முன்னால ஒரு பையன் லோடு ஏத்திகிட்டு டிவிஎஸ் எக்ஸெல்-ல போயிகிட்டிருந்தாரு அவருகிட்ட கல்லணைக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். என்கூடவே வாங்கன்னு சொல்லி கூட்டிகிட்டு போனாரு. கொஞ்ச தூரம் போனதுக்கு அப்பரமா ஒரு வழிய காட்டி இந்த ரோடு நேரா பை-பாஸ் போயி சேரும் அப்படின்னு வழி காட்டுனாரு, அவருக்கு என் நன்றியை சொல்லிட்டு கிளம்பினேன். அவர் சொன்ன மாதிரியே கரெக்டா அந்த ரோடு வந்து சேர்ந்துட்டேன். அவருக்கு மறுபடியும் என் நன்றியை இங்கே சொல்லிக் கொள்கிறேன். அப்படியே அங்கேயே ஒரு நல்ல “டீ” குடிச்சிட்டே நினைச்சேன் திருப்பூர்ல கிடைக்கிறதெல்லாம் டீயா? ரொம்ப கேவலமா இருக்கும். இருந்தாலும் வேற வழியில்ல அதைதான் குடிக்கிறேன். டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் மொபைல்-ல கடல போட்டுட்டு கிளம்பினேன் நல்லா இருட்டிடுச்சு.
                                

போற வழியெல்லாம் பாதி இடங்கள்ள தெரு விளக்கு எதுவுமே இல்ல. ஏதோ அடர்ந்த காட்டுக்குள்ள போற மாதிரி ஒரு ஃபீலிங். சின்னதா ஒரு பயம் வேற. ரோட்டோட ஒரு பக்கம் ஆறு, மறுபக்கம் கரும்பு தோட்டம். யாராவது வழிப்பறி பண்ணினாகூட ஒன்னும் பண்ண முடியாது. திருநெல்வேலி அல்வா போல திருவையாறு அசோகா அல்வா ரொம்ப ஃபேமஸ்ங்க அதனால ஒரு வழியா திருவையாறு போய் சேர்ந்துட்டு, திருவையாறுலேயே ரொம்ப ஃபேமஸான ஆண்டவர் அல்வா கடையில சுடச்சுட “அசோகா அல்வா” வாங்கிகிட்டு கிளம்பினேன். அந்த கடையோட முதலாளிய பார்க்கணுமே சும்மா வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை போட்டுகிட்டு நெற்றி நிறைய 2 ரூபாய் நாணய அளவுக்கு குங்கும பொட்டோட பக்தி பரவசமா இருப்பாருங்க. அதோட அவரு வயசு வித்தியாசம் இல்லாம இல்லாம எல்லாரையும் வாங்க ஐயா, நன்றிங்க ஐயா அப்படின்னு மரியாதையாதான் அழைப்பார். எத்தனை பேரு இந்த காலத்துல மரியாதை கொடுத்து பேசுறாங்க? பணம் வந்தா எல்லாமே மாறிடுது.
எப்படியோ ஒரு வழியா இரவு 08:30 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சு. வீட்ல எல்லாரும் என்னடா இப்படி கருத்து போயி வந்திருக்க அப்படின்னு கேட்டுடாங்க. பைக்ல போனதால புழுதி மண் எல்லாம் என்மேல இருந்து என்னோட கலரே மாறிடுச்சு. க்ளீன் பண்ணினதுக்கு அப்பறம்தான் என்னோட ஒரிஜினல் கலரே வந்துச்சு. ரொம்ப நாளைக்கு அப்பறம் வீட்டு சாப்பாடு கிடைச்சுச்சு. நல்லா திருப்தியா சாப்பிட்டுட்டு படுத்ததுக்கு அப்பறம்தான் பிரச்சனையே ஆரம்பிச்சது. என்னோட ரெண்டு தோள்பட்டையும் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சது. அய்யோ ரொம்ப நேரம் தூக்கமே வரல என்ன பண்றது? வழக்கம்போல கை வலியோட எஸ்எம்எஸ் சாட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்பறம் எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியல,
பதிவு ரொம்ப நீளமாயிடுச்சுனு நினைக்கிறேன். இதுக்கு மேல போனா யாரும் படிக்க மாட்டீங்கன்னு தெரியும். மற்ற விஷயங்களை அடுத்த பதிவுல சொல்றேன்.
(தொடரும்) 
 

Friday, January 14, 2011

பொங்கல் நல்வாழ்த்துகள்

pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
pongal scraps greetings for orkut
Pongal Greetings, Pongal Orkut Scraps, Graphics

Monday, January 3, 2011

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 03 / 10 வருடம் 2003

அனைவருக்கும் வணக்கம்,
இந்த புதிய ஆண்டில் என்னுடைய முதல் பதிவு இது. இந்த ஆண்டு முதல் தொடர்ந்து எழுதலாம் அப்படின்னு முடிவு பண்ணியிருக்கேன். இதுவரை ஆதரவு அளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். தொடர்ந்து இந்த ஆண்டும் உங்களின் மேலான ஆதரவை எதிர் நோக்கி ஏற்கனவே எழுதிய பதிவை தொடர்ந்து எழுதுகிறேன். 


போன பதிவில் 2002 - ல் எனக்கு பிடித்த பாடல்களை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் 2003 - ம் ஆண்டில் எனக்கு பிடித்த பாடல்கள்.

2003 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்
01
பாடல்        : எகிறி குதித்தேன் வானம் இடித்தது..
படம்         : பாய்ஸ்
பாடகர்கள்   : கார்த்திக், சித்ரா சிவராமன்
இசை       : A.R.ரஹ்மான்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
02
பாடல்        : கவிதையே தெரியுமா...
படம்         : ஜெயம்
பாடகர்கள்   : ஆர்.பி.பட்நாயக், ஹரணி
இசை       : ஆர்.பி.பட்நாயக்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
03
பாடல்        : ஆசை ஆசை இப்பொழுது...
படம்         : தூள்
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
04
பாடல்        : காதல் வந்தால்...
படம்         : இயற்கை
பாடகர்கள்   : சுஜாதா, சங்கர் மகாதேவன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
05
பாடல்        : எனக்கு பிடித்த பாடல் அது...
படம்         : ஜூலி கணபதி
பாடகர்கள்   : ஸ்ரேயா கோஷல்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
06
பாடல்        : நெஞ்சோடு கலந்திடு...
படம்         : காதல் கொண்டேன்
பாடகர்கள்   : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

07
பாடல்        : ஒரு ஊரில் அழகே உருவாய்...
படம்         : காக்க காக்க
பாடகர்கள்   : கார்த்திக்
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

08
பாடல்        : நீ தூங்கும் நேரத்தில்..
படம்         : மனசெல்லாம்
பாடகர்கள்   : ஹரிஹரன்
இசை       : இளையராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
09
பாடல்        : என்ன இது  என்ன இது...
படம்         : நள தமயந்தி
பாடகர்கள்   : ரமேஷ் விநாயகம், சின்மயி
இசை       : ரமேஷ் விநாயகம்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
10
பாடல்        : பெண்ணே நீயும் பெண்ணா...
படம்         : ப்ரியமான தோழி
பாடகர்கள்   : கல்பனா, உன்னி மேனன்
இசை       : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ
முந்தைய பதிவு:
பாகம் - 01/10 வருடம் 2001 
பாகம் - 02/10 வருடம் 2002

தொடரும்...

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!!