Monday, February 14, 2011

"கரப்ட்" ஆன Outlook Express & Outlook ஈமெயில் ஃபோல்டர்களை மீட்டு எடுக்க

இணைய வாசகர்களுக்கு வணக்கம்,

எனக்கு ஏதோ கொஞ்சம் இருக்குற கணிப்பொறி அறிவுல எனக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் GMail, Yahoo, Msn, Rediff-னு எத்தனையோ மின்னஞ்சல்களை பயன் படுத்துகின்றோம். நாம் அதிகமாக நேரடியாக அந்த தளங்களுக்கே சென்று நமக்கு வந்த மின்னஞ்சல்களை பார்க்கின்றோம். ஒருசிலர் Outlook Express, Ms-Outlook, Thunderbird, Incredimail போன்றவற்றில் POP3 Account ஆக இணைத்து பயன்படுத்துவார்கள்.
அலுவலகத்திற்கென்று தனியாக Email Domain வைத்திருப்பவர்கள் அதிக அளவில் Outlook Express, Ms-Outlook ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். நாம் முக்கியமான ஈ-மெயில்களை ரூல்ஸ் போட்டு தனித்தனி ஃபோல்டர்களில் வைத்திருப்போம். முதல் நாள் வரைக்கும் நல்லாதான் இருக்கும் மறுநாள் கம்ப்யூட்டரை இயக்கி மெயில் செக் பண்ணலாம்னு Outlook Expess or Outlook Open பண்ணினா இன்பாக்ஸ் அல்லது ஒருசில ஃபோல்டர்களில் "There is no messages to view in this box" அப்படின்னு காட்டும். Deleted Items -லயும் இருக்காது. என்ன முயற்சி பண்ணினாலும் அந்த மெயில்களை பார்க்கவே முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறீங்களா??

அப்படின்னா உங்களுக்குதான் இந்த பதிவு. முதலில் மெயில் காணாம போன ஃபோல்டரில் Right Click செய்து Properties போங்க. அதுல அந்த போல்டர் சைஸ் என்ன காட்டுதுன்னு பாருங்க. சைஸ் காட்டினா உங்க மெயில் இருக்குன்னு அர்த்தம். (சில நேரம் அதிகமா கரப்ட் ஆயிருந்தா மீட்க முடியாது). மேலும் அந்த ஃபோல்டர் எங்க சேவ் ஆயிருக்கோ அதோட லொக்கேசனனையும் பார்த்துக்கோங்க. இப்போ கீழே கொடுத்திருக்குற DOWNLOAD பட்டனை க்ளிக் செய்து சாஃப்ட்வேரை தறவிக்கம் பண்ணிக்கோங்க.
(No Installation Required & No Spyware)
ZIP ஃபைல்-லா இருக்குற இந்த சாஃப்ட்வேரை Extract பண்ணினா அதுல Calcrecovery.exe அப்படின்னு ஒரு ஃபைல் இருக்கும். அதை டபுள் க்ளிக் செய்து ஓபன் பண்ணினா கீழே உள்ள படத்தில் இருக்குறது போல ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அதுல Toolbox க்ளிக் பண்ணினா அடுத்த படத்துல காட்டுறது போல ஒரு லிஸ்ட் வரும், இதுல நமக்கு தேவையான wor, excel, cd, dvd, hard disk, Undeleted file போன்ற ஆப்சன் செலக்ட் பண்ணிக்கலாம்.


நமக்கு Outlook Express அல்லது Outlook -ல உள்ள மெயில் வேணும்னா அந்த ஆப்சன் செலக்ட் பண்ணுங்க. இப்போ Recover பட்டன் க்ளிக் பண்ணினா புதுசா ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதுல நம்ப மெயில் சேவ் ஆகியிருக்குற லொக்கேசன் செலக்ட் பண்ணி எந்த ஃபோல்டர்ல உள்ள மெயில் வேணுமோ அதை செலக்ட் பண்ணி Recover கொடுங்க. Recover ஆன பிறகு உங்க மெயில் பாக்ஸ் ஓப்பன் பண்ணினா நாம எந்த ஃபோல்டர் ரெக்கவர் பண்னினமோ அதுக்கு முன்னால Recovered என்ற பெயரோட நம்முடைய மெயில்கள் இருக்கும்.

இதில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Valentine's Day Special Song:

"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்" 

குறிப்பு: ஏர்டெல் சர்வரில் ஏற்பட்ட குளறுபடியால் பல பேருக்கு ப்ளாக்ஸ்பாட் ஓபன் ஆகவே இல்ல. அந்த மாதிரியான நேரங்களில் http://www.iphider.org/ என்ற தளத்தில் நுழைந்து ப்ளாக்ஸ்பாட் அட்ரஸ் கொடுத்து OK கொடுத்தால் ஓபன் ஆகும். ஆனால் ஒருசில ஜாவா ஃபங்சன்ஸ் ஒர்க் ஆகாது.


Thursday, February 3, 2011

விடுமுறை பயணம் - சுவாமிமலை, கல்லணை

வணக்கம் நண்பர்களே
முந்தைய பதிவான விடுமுறைப் பயணம் - அசோகா அல்வா, பொங்கல், கல்லணை -யின் தொடர்ச்சியாக இந்த பதிவு. எழுதுவதற்கு கொஞ்சம் சோம்பேறித்தனம். அதான் இம்புட்டு லேட்டு.
சரி விஷயத்துக்கு வர்றேன். பொங்கல் அன்னைக்கு காலையில லேட்டாதான் எழுந்தேன். பல் தேய்ச்சிட்டு வ்ந்ததும் சாப்பிடுற நேரம் ஆச்சு, சாப்பிடுறியா இல்ல டீ வேணுமா அப்படின்னு அம்மா கேட்டாங்க. டீ குடுங்க அப்பறமா சாப்பிடுறேன்னு சொன்னேன். வழக்கமா வீட்ல என்ன பண்ணுவோம்? டீ குடிக்கும் போது டிவி பார்த்துகிட்டே குடிப்போம். அதையேதான் நானும் பண்ணினேன். டிவி-ல லியோனியோட பட்டி மன்றம் கலைஞர் தொல்லைக்காட்சில ஒளிபரப்பினாங்க.
பட்டிமன்ற துளிகள்:
 நம்ம கலைஞர் கவட்மெண்ட்டு வேலையெல்லாம் விட்டுபுட்டு பட்டிமன்றத்துக்கு அமைச்சர்கள் படைசூழ வந்திருந்தாரு.லியோனிக்கும் வேற வழி தெரியல. அவரும் கலைஞர் புகழை அடிக்கடி பாடினார். அதோட ஒரு அமைச்சரைப் பற்றியும் பேசினார். அது என்னன்னா ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சில அந்த அமைச்சர் கலந்துகிறதா இருந்திருக்காரு. அவரை வரவேற்க ”ட்ரம்ஸ்” ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ட்ரம்ஸ் வாசிக்கிறவங்களுக்கு அமைச்சர் கார் எதுன்னு தெரியல. முதல்ல ஒரு கார் வந்ததும் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பார்த்தா அதிலேர்ந்து நம்ப லியோனி இறங்கியிருக்காரு. நிகழ்ச்சி அமைப்பாளர் ட்ரம்ஸ் வாசிக்கிரவங்கள கூப்பிட்டு எதுக்குய்யா லியோனிக்கெல்லாம் வாசிக்கிறீங்க, அமைச்சர் கார் வ்ரும்போது வாசிச்சா போதும்னு சத்தம் போட்டிருக்காரு. 
அடுத்ததா ஒரு கார் வந்திருக்கு, அமைச்சர்தான் வர்றார்னு அதிரடியா வாசிச்சிருக்காங்க அந்த ட்ரம்ஸ் பார்ட்டி. ஆனால் வந்தது வேற ஒரு ஆளு. மறுபடியும் திட்டு வாங்கிகிட்டாங்க. 
அடுத்து மூனாவதா ஒரு கார் வந்திருக்கு. இவங்க யாரும் கண்டுக்கவே இல்லையாம். வாசிக்கவும் இல்லையாம். பார்த்தா அந்த கார்லதான் அமைச்சர் வந்திருந்தாராம். இவங்க வாசிக்காம விட்டது அமைச்சருக்கு ரொம்ப அவமானமா போச்சாம். எதுவுமே வெளில காட்டிக்காம உள்ள போயிருக்காரு. இந்த விஷயத்தை லியோனி பேசும்போது மேடையில எல்லார்கிட்டேயும் சொல்லிட்டாராம். அதுக்கு அமைச்சர் பேசும்போது சொன்னாராம் அவங்க வாசிக்காதது கூட எனக்கு அவமானமா தெரியல. ஆனா நீங்க மேடையில சொன்னதுதான் அவமான இருக்கு அப்படின்னு சொன்னாராம். அந்த அமைச்சரும் இந்த பட்டி மன்றத்துக்கு வ்ந்திருந்தாரு. அவரு ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவ்ர் அப்படிங்குறதுக்கு உதாரணமா அந்த சம்பவத்தை மறுபடியும் மேடையில சொல்லி அவர புகழ்றதா நினைச்சு மறுபடியும் அதை எல்லார்கிட்டேயும் உளறிட்டார் லியோனி. இதுதான் எனக்கு பெரிய காமெடியா இருந்துச்சுங்க. பாவம் அவரும் என்ன பண்ணுவாரு “முத்தமிழ் அறிஞர்” முன்னால அவருக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. ஒரு பயத்தோடவே பேசினார்.
அது முடிஞ்சதுக்கு அப்பறம் பாலிமர் டிவி-ல ஒரு லியோனியோட பட்டிமன்றம் ஒளிபரப்புனாங்க, அது பார்க்க நல்லா நகைச்சுவையா இருந்துச்சு. லியோனி லியோனிதாங்க.
பொங்கல்:
அப்பறம் மதியம் மணி 12க்கு மேல ஆச்சு. ரொம்ப நாளைக்கு அப்பறம் எங்க ஊரு ”குடமுருட்டி” ஆற்றில் குளிக்க போனேன்.  ஒரு மணி நேரம் நல்லா உல்லாசம குளிச்சிட்டு வீட்டுக்கு வந்தா மணி 01:30 ஆச்சு. வீட்ல பொங்கல் பூஜை போட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அதுல கலந்துகிட்டு சூரியனுக்கு எல்லாம் படைச்சிட்டு எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தாங்க. நான் என் நண்பனை சாப்பிட கூப்பிட்டுகிட்டு வர்றதா சொல்லிட்டு கிளம்பிட்டேன். அவன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன். அதனால தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு என் வீட்டுக்கு வந்துடுவான். ரம்ஜான், பக்ரீத்-க்கு அவன் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிடுவான். நானும் பிரியாணி சாப்பிட போயிடுவேன்.
அப்பறம் நாங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டோம். என்ன சின்ன வயசுல இருந்த ஒரு ஆர்வம் இப்போ எதுலேயும் இல்ல. கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். அப்போ இன்னொரு ஃப்ரண்டு கால் பண்ணி மச்சா ஃப்ரியாதான இருக்க என் வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டான். சரிடான்னு நானும் என் நண்பனும் பாபநாசத்துல உள்ள அவனோட வீட்டுக்கு போனோம். அவனோட பேசிகிட்டிருந்தோம். பக்கத்துல பாசலா தியேட்டர்-ல ஆடுகளம் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. வாடா போகலாம்னு கூப்பிட்டா பயபுள்ள உங்ககூட மட்டும் வரவே மாட்டேண்டா அப்படின்னுட்டான். ஏன்னா தீபாவளி அன்னைக்கு அதே தியேட்டர்ல வ குவார்டர் கட்டிங் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. வரமாட்டேன்னு சொன்னவன பிடிவாதமா கூட்டிகிட்டு போனோம். அத பார்த்து வெறுத்து போனவன்தான். அதுக்கபறம் படம் பார்க்க கூப்பிட்டாலே அவன் வற்றதே இல்ல. அவன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு ஒய்ஃப் கூட போறேன் நீங்களும் வாங்கன்னு கூப்பிட்டாம். நாங்களும் படத்துக்கு போறத கேன்சல் பண்ணிட்டு கோயிலுக்கு கிளம்பினோம்.
சுவாமிமலை: கோயிலுக்கு முன்னாலயே நிறைய கூட்டம். பைக் பார்க்கிங் பொது வழியிலேயே நிறுத்த சொல்லி அதுக்கும் டோக்கன் வாங்குறாங்க. அப்போதாங்க அது நடந்துச்சு. நான் என் பைக்க நிறுத்த போனப்ப சறுக்கி விட்ருச்சு. நல்லவேலையா நான் தப்பிச்சிட்டேன் ஆனா என் பைக் விழுந்து அடி பட்ருச்சு. தார் ரோட்டை சுத்தம் பண்ணாம விட்டதால மணல்தான் ரோட்டுல இருக்கு. என்னைப் போல எத்தனைபேரு சறுக்கி விழுந்தாங்க தெரியல. அர்ச்சனை தட்டு வாங்கிகிட்டு உள்ள போனோம். இருக்குற கூட்டத்துல இலவச தரிசனம் போனா சீக்கிரம் உள்ளவும் போக முடியாது, வெளியேவும் வர முடியாது. அதானால சிறப்பு வழி தரிசன சீட்டு ஆளக்கு 20 ரூபாய்னு வாங்கினோம்.
கோயில்-ல அடிக்கிறாய்ங்க கொள்ளை: அர்ச்ச்னை பண்ணனும்னா அதுக்கு தனியா அர்ச்சனை சீட்டு வாங்கனும்.  போன வருசம் நான் போனப்ப 2 ரூபாய்தான் அர்ச்சனை சீட்டு. ஆனா இந்த வருஷம் 5 ரூபாய் வாங்கினாங்க. என்னடான்னு பார்த்தா அர்ச்சனை சீட்டுல 2 ரூபாய்தான் போட்டிருக்கு, ஆனால் அர்ச்சனை சீட்டோட ஒரு எண்ணைய் பாக்கெட் கொடுக்குறாங்க, ஏதோ பஞ்ச தீப எண்ணை அப்படின்னு போட்டிருக்கு. VVD Gold -னு ஒரு எண்ணை பாக்கேட் 50 பைசாவுக்கு பெட்டி கடையில கிடைக்கும் பாருங்க அதே சைஸ் தாங்க கோயில்ல கொடுத்த எண்ணை பாக்கேட். விலை மட்டும் 3 ரூபாய் அதோட சேர்த்துதான் 5 ரூபாய்க்கு அர்ச்ச்னை சீட்டு கொடுக்குறாங்க. கட்டாயமா நாம அந்த எண்ணெய் பாக்கெட் வாங்க வைக்கிறாங்க. 50 பைசா எண்ணைய் பாக்கெட் 3 ரூபாய். யாரு யாருகெல்லாம் கமிசன் போகுதோ????? இதைவிட பெரிய கொடுமை அர்ச்சனை பண்ணி முடிச்சதும் நம்மளோட அர்ச்சனை தட்டை நம்மகிட்ட கொடுக்க அர்ச்சனை சீட்டோட குருக்கள் காணிக்கை 10 ரூபாய் கொடுங்கன்னு கேட்டு வாங்கிகிட்டுதான் அர்ச்ச்னை தட்டை நமக்கு கொடுக்குறாரு. என்ன கொடுமை சார் இது, வாங்குறது லஞ்சம் அதுக்கு பேரு காணிக்கை!!!??? அதையும் கொடுத்துட்டுதான் அர்ச்சனை தட்டு வாங்கிகிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மாட்டுப் பொங்கல் அதையும் சிறப்பாவே கொண்டாடிட்டு ஜனவரி 17 திருப்பூர் நோக்கி மறுபடியும் என் பைக்-ல திருவையாறு, கல்லணை, திருச்சி வழியா பயணமானேன். நம்ம ”இரவுவானம்” சுரேஷ் வரும்போது திருவையாறு அசோகா அல்வா வாங்கி வாடான்னு பணம் கொடுத்டுவிட்டாரு. ஆனால பொங்கல் காரணமா நான் வரும்போடு எல்லா கடையும் பூட்டியே இருந்துச்சு. அதனால வாங்க முடியல. அப்பறம் வழியெங்கும் உள்ள கிராமங்களில் பொங்கல் மற்றும் அதையொட்டி நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளையும் மக்கள் சிறப்பா கொண்டாடிகிட்டு இருந்தாங்க. அதைப்பார்த்ததும் பழைய நினைவுகளை அசைபோட்டுகிட்டே திருப்பூர் வந்து சேர்ந்தேன். மறுநாள் முதல் அதே கம்பெனி, அதே வேலை, மறுபடியும் இந்த மாதிரி ஒரு விடுமுறையை எதிர்பார்த்துகிட்டிருக்கேன்.

நான் எடுத்த புகைப்படங்கள்: 











நன்றி!!!

குறிப்பு: பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு, உங்க கருத்தையும் மறக்காம சொல்லிட்டுப் போங்க.