Friday, October 8, 2010

அறிமுக சிநேகம்

புதிவுலகத்திற்கு வணக்கம்,
பதிவுகளை படித்துக் கொண்டிருந்த நானும் இதோ எனக்கு தோன்றியதை எழுத வந்துவிட்டேன். நான் எழுதுறதுல சில மொக்கையா இருக்கலாம் அல்லது ஒருசில நல்லாக்கூட இருக்கலாம். எதுவா இருந்தாலும் எழுதுறதுனு முடிவு பண்ணியாச்சு நல்லா இருந்தா என்ன? மொக்கையா இருந்தா என்ன? ஆனா எழுதும்போதுதான் என்ன எழுதுறதுன்னு தெரியல. டேய் "டிங்டாங்" இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிச்சிருக்கனுங்கிறது.
நான்  தலைப்பு வைக்கவே தடுமாறினேன். என் தலைப்பிற்கே ஏகப்பட்ட நக்கல் கேள்விகள், அதனாலயே பலமுறை என் தலைப்பையே மாற்றி ஒரு வழியா சிநேகம் – னு வைத்துள்ளேன். சிநேகம்-னா நட்பு-னு அர்த்தம். நட்பைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் நட்பை பற்றி தெரியும். இருந்தாலும் நட்பைப் பற்றிய நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் அதையும் கொஞ்சம் பார்த்துடுங்க. பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


படம்: தளபதி
பாடல்: காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே ஏசுதாஸ்காட்டுக் குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்

தவிலை தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்
                                (
காட்டுக்குயிலு)
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் சொர்க்கத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
                                (
காட்டுக்குயிலு)

போடா எல்லாம் விட்டுத்தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக் கொள்ளடா டோய்

பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன

தோட்டம் வச்சவன் தண்ணீர்
விடுவான் சும்மா நில்லடா டோய்

ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூழம் பத்த வச்சு காயலாம்

தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பா வெள்ளம் போல பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய்
                                (
காட்டுக்குயிலு)

பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே

உள்ளமட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பைப் போல எண்ணுவேன்

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்படி நாம் தான் ஹோய்
                                (காட்டுக்குயிலு)


என்றும் அன்புடன்

5 comments:

இளங்கோ said...

Welcome Friend.

Ding Dong said...

முதல் ஆளாக என்னை வரவேற்ற நண்பரே உமக்கு நன்றி.. தங்களின் மேலான கருத்துகளையும் ஆலோசனையும் எப்போதும் வழங்கிட வேண்டுகிறேன்.

இரவு வானம் said...

டிங் டாங், கோயில் மணி, கோயில் மணி நான் கேட்டேன், வாங்க டிங்டாங், உங்க கிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். தீயா வேலை செய்யனும் தம்பி..................

RAVI said...

இந்த பாட்டும் இதுல வர்ற விஷூவல்சும் எனக்கு ரொம்ப பிடித்தமானவை.கலக்குங்க த்ம்பி.

Ding Dong said...

நன்றி ரவி அண்ணா...

Post a Comment