Wednesday, December 29, 2010

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 02 / 10 வருடம் 2002

அனைவருக்கும் வணக்கம்
நான் ஏற்கனவே போன பதிவில் 2001 - ல் எனக்கு பிடித்த பாடல்களை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் 2002 - ம் ஆண்டில் எனக்கு பிடித்த பாடல்களை பதிவாக இட்டுள்ளேன்.

2002 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்
01
பாடல்        : செல்லமாய் செல்லம் என்றாயடா
படம்         : ஆல்பம்
பாடகர்கள்   : ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன்
இசை       : கார்த்திக் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
02
பாடல்        : பூ வாசம் புறப்படும் பெண்ணே...
படம்         : அன்பே சிவம்
பாடகர்கள்   : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
03
பாடல்        : மனசே மனசே மனசில் பாரம்..
படம்         : ஏப்ரல் மாதத்தில்
பாடகர்கள்   : கார்த்திக்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
04
பாடல்        : மொட்டுகளே மொட்டுகளே
படம்         : ரோஜாக் கூட்டம்
பாடகர்கள்   : ஹரிஹரன். சாதனா சர்கம்
இசை       : பரத்வாஜ்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
05
பாடல்        : முல்லைப்பூ சூடிக்கொண்டு
படம்         : காதல் சாம்ராஜ்யம்
பாடகர்கள்   : S.P.B.சரண், வெங்கட்பிரபு, யுகேந்திரன்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
06
பாடல்        : விடைகொடு எங்கள் நாடே..
படம்         : கன்னத்தில் முத்தமிட்டால்
பாடகர்கள்   : AR ரெஹனா, பால்ராம், ஃபெபி மணி, MS   விஸ்வநாதன்
இசை       : AR ரஹ்மான்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

07
பாடல்        : லேசா லேசா நீயில்லாமல்...
படம்         : லேசா லேசா
பாடகர்கள்   : அனுராதா ஸ்ரீராம்
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 

08
பாடல்        : என் அன்பே என் அன்பே..
படம்         : மெளனம் பேசியதே
பாடகர்கள்   : சங்கர் மஹாதேவன்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
09
பாடல்        : சகலகலா வல்லவனே...
படம்         : பம்மல் கே சம்மந்தம்
பாடகர்கள்   : ஹரிஹரன், சுஜாதா
இசை       : தேவா
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ 
 
10
பாடல்        : பொய் சொல்லக் கூடாது காதலி...
படம்         : ரன்
பாடகர்கள்   : ஹரிஹரன்
இசை       : வித்யாசாகர்
பாடல் வரிகள்      பாடலின் வீடியோ
முந்தைய பதிவு: பாகம் - 01/10 வருடம் 2001 

தொடரும்...

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!!

Monday, December 27, 2010

10 ஆண்டுகளில் பிடித்த 100 பாடல்கள் (2001 – 2010) பாகம் – 01 / 10 வருடம் 2001


வணக்கம் நண்பர்களே!

நம்ம இரவு வானம் பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள் - தொடர் பதிவுஎன்ற தலைப்பில் அவருக்கு பிடித்த பாடல்களை தொகுத்து வழங்கியிருந்தார். அந்த பதிவினை தொடரவும் பொதுவான அழைப்பும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவினை நான் தொடரலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு பாடல்களை தேர்வு செய்யலாம் அப்படின்னு நினைக்கும் போது நிறைய பாடல்கள் பிடித்தவையா இருக்கு. என்னால ஒரு வருடத்துல இந்த ஒரு பாட்டுதான் சிறந்தது அப்படின்னு தேர்வு செய்ய முடியல. அந்த அளவுக்கு எனக்கு சங்கீத ஞானமும் கிடையாது. அதனால ஒரு வருடத்திற்கு 10 படங்களை தேர்வு செய்து அதிலிருந்து 10 பாடல்களை தேர்வு செய்து பதிவா போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒரே பதிவுல 100 பாடல்களையும் தொகுத்து வழங்க முடியாது. பதிவின் நீளம் கருதி பதிவுக்கு ஒரு வருடம்னு 10 வருடத்திற்கு 10 பதிவா வெளியிடுறேன். 

2001 – ல் எனக்கு பிடித்த 10 பாடல்கள்

01

பாடல்       : முத்தம் முத்தம் முத்தமா
படம்        : 12B
பாடகர்கள்   : கே கே, மகாலக்ஷ்மி
இசை      : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ




02
பாடல்       : ஒளியிலே தெரிவது
படம்        : அழகி
பாடகர்கள்   : பவதாரணி, கார்த்திக்
இசை      : இளையராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

03
பாடல்       : சொல்லாமல் தொட்டுச் செல்லும்
படம்        : தீனா
பாடகர்கள்   : பவதாரணி, ஷங்கர் மஹாதேவன்
இசை      : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 


04
பாடல்         : முன்பனியா.. முதல் மழையா..
படம்          : நந்தா
பாடகர்கள்     : SP பாலசுப்ரமணியம், சுபா
இசை       : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ





05
பாடல்        : தோழா தோழா
படம்         : பாண்டவர் பூமி
பாடகர்கள்    : சித்ரா சிவராமன், யுகேந்திரன்
இசை      : பரத்வாஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 




06
பாடல்         : தாய்மடியே உன்னைத் தேடுகிறேன்
படம்          : ரெட்
பாடகர்கள்     : கார்த்திக்
இசை       : தேவா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 





07
பாடல்         : வயது வா வா சொல்கிறது
படம்          : துள்ளுவதோ இளமை
பாடகர்கள்     : ஹரிணி, ஸ்ரீனிவாஸ்
இசை       : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 



08
பாடல்         : புண்ணியம் தேடி..
படம்          : காசி
பாடகர்கள்     : ஹரிஹரன்
இசை       : இளையராஜா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

09
பாடல்         : குல்முஹர் மலரே..
படம்          : மஜ்னு
பாடகர்கள்     : ஹரிஹரன், திப்பு
இசை       : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ

 

10
பாடல்         : மின்னலைப் பிடித்து..
படம்          : ஷாஜஹான்
பாடகர்கள்     : ஹரிஷ் ராகவேந்திரா
இசை       : மணிஷர்மா

பாடல் வரிகள்    பாடலின் வீடியோ




இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை மட்டுமே. ஒவ்வொருவரின் ரசனைகள் வ்வேறுபடும். எனக்கு பிடித்தவைகளில் சில உங்களுக்கு பிடிக்காமலும் இருக்கலாம்.  இருந்தாலும் என்னுடைய பதிவு தொடரும்....

நன்றி: ஒவ்வொரு வருடத்தின் திரைப்படங்களை பட்டியலிட்டு தந்த விக்கிபீடியாவிற்கும், புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்களைத் தேடித் தந்த கூகிளுக்கும் நன்றி!!! 

Friday, December 24, 2010

Body Browser - கூகிளின் புதிய வசதி

கூகிளின் புதிய சேவையாக “Google Body Browser" என்ற வசதியை சேர்த்துள்ளது. கூகிள் எர்த் எப்படி வேலை செய்கிறதோ அதே முறையில் இதுவும் வேலை செய்கிறது. 
மனித உடலின் பாகங்களை முப்பரிமான முறையில் இந்த வசதியின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்ட உடல் பாகத்தின் பெயரை கொடுத்தும் தேடி அதற்கான விளக்கத்தையும், வேலை செய்யும் விதத்தையும் தெரிந்து கொள்ள முடியும். 
சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதிப்பில் முதலில் பெண்ணின் உடலமைப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆணின் உடலமைப்பும் சேர்க்கப்பட உள்ளது.

முக்கியமான விசயம் என்னன்னா இது WebGL என்ற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. எனவே உங்களின் உலவியிலும் இந்த WebGL என்ற வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த வசதி நம்பகிட்ட இல்லையேன்னு கவலைப்படுறிங்களா? கூகிள் இருக்க கவலை எதற்கு? கூகிள் க்ரோம் பீட்டா 9.0 -ல் இந்த வசதி உள்ளது. உடனே நிறுவிக் கொள்ளுங்கள். மேலும் நெருப்பு நரி 4 -ல் இந்த WebGL வசதி உள்ளது.

http://bodybrowser.googlelabs.com என்ற முகவரியில் நமது உடலமைப்பினை பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் WebGL உள்ள உலவிகளின் தறவிறக்க சுட்டிகளும் அதே தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

நன்றி!!!

Wednesday, November 3, 2010

HD Video Player

வீடியோ ஃபைல்களைப் பார்க்க எத்தனையோ வீடியோ பிளேயர்கள் உள்ளன. அவைகள் வீடியோக்கள் எந்த தரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே தரத்துடன் தான் பிளே செய்யும்.

ஆனால் நம்மிடம் உள்ள சாதாரண Video File-களை அதிக தரத்துடன் HD வடிவில் பார்க்கவும், மேலும் High Definition (HD) ஃபார்மட் வீடியோக்களை பிளே செய்யவும்  இலவசமாக Splash Lite என்ற வீடியோ பிளேயர் உள்ளது. 


அனைத்து வகை ஃபார்மட் ஃபைல்களையும் பிளே செய்யும் விதத்தில் இந்த பிளேயர் வடிவமைக்கப் பட்டுள்ளது. மற்ற பிளேயரில் உங்கள் வீடியோவை பிளே செய்தும், இந்த Splash Lite  HD பிளேயரில் உங்களிம் வீடியோவை பிளே செய்து பார்த்தும் வீடியோவின் தரத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் பண்ணவும்.
Download Link: Splash Lite HD Player



நன்றி.

Tuesday, October 26, 2010

எந்திரனுக்கு சவால்

தலைப்பிறகும் இந்த படத்திறகும் என்ன சம்மந்தம்-னு நினைக்கிறீங்களா? எல்லாரும் எந்திரனைப் பற்றி எழுதிட்டாங்க. நானும் ஏதாவது என் பங்குக்கு எழுதனும்ல அதான், எந்திரன் வசூல் ரீதியா வெற்றியடந்த ஒரு திரைப்படம். ஆனால் எத்தனை நாள் அந்த படம் ஓடும்னு நினைக்கிறீங்க?  150 நாள்? 175 நாள்? 200 நாள்? அல்லது ஒரு வருடம்? அதுவும் ஒரே திரையரங்கில்? முடியுமா? மக்கள் மனதில் எத்தனை நாள் எந்திரன் நிலைத்திருக்கும்? 


ஆனால் ஒரு படம் வெளியான நாள் முதலா இன்றுவரை ஒரே திரையரங்கில்தொடர்ந்து 15 வருடங்களாக வெற்றிநடை போட்டு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன படம்-னு உங்க எல்லாருக்குமே தெரியும்னு நினைக்கிறேன். அந்த படம் "Dilwale Dulhania Le Jayenge". 



15 வருடங்களுக்கு முன்பு 20-10-1995 -ல் மும்பை மராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் இன்றும் தொடர்ந்து அதே திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. இந்த மாதம் 21-10-2010 தனது 15 வது வருடம் மற்றும் 783 வாரங்களை நிறைவு செய்துள்ளது. தினமும் காலை 11:30 காட்சியாக இன்றும் திரையிடப்படுகிறது.


வருகின்ற ஜனவரி 2011-ல் தனது 800 வது வாரத்தை நிறைவு செய்கிறது. இதுதான் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.


தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டும், DVD-களாக வெளியிடப்பட்டும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த திரைப்படத்தின் சென்ற வார வசூல் 20000. 


இந்த அளவிலான சாதனையை எந்திரனால் படைக்க முடியுமா? மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பதுதானே சாதனை? அப்போ இது எந்திரனுக்கு சவாலான திரைப்படம்தானே?


இந்த படம் இந்த அளவுக்கு வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்க என்ன காரணம்னு நீங்க நினைகிறீங்கன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.


குறிப்பு: இது எந்திரனுக்கு எதிரான பதிவு அல்ல. எதிரானதுன்னு நீங்க நினைச்சா நினைச்சிட்டு போங்க. அதைப்பற்றி எனக்கு கவலை இல்ல. நான் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதிகிட்டே இருப்பேன்.

Friday, October 22, 2010

முதல் காதல்

Youtube-ல் உலாவியபோது கிடைத்த Video. ஏற்கனவே பார்த்த படம், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய படம் ”விண்ணைத் தாண்டி வருவாயா”. அதில் வரும் முதலாவது Climax எனக்கு மிகவும் பிடித்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும். கீழே உள்ள video-வை ஒருமுறை play செய்து பாருங்கள்.


இதைவிட காதலின் உணர்வை சிறப்பாக காட்ட முடியுமா?

என்றும் அன்புடன்

Thursday, October 21, 2010

கணினியை பாதுகாக்க

நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி வேகம் குறைந்தும், அதிக Error - களையும் காட்டிக்க கொண்டே இருந்ததால் அதற்கான தீர்வைத் தேடி இணையத்தில் உலவியபோது ஒரு சிறப்பான இலவச (Freeware)  Advance System Care என்ற மென்பொருள் கிடைத்தது. இதை பயன்படுத்தி பார்த்தபோது எனக்கு திருப்திகரமாக இருந்த காரணத்தினால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
இந்த மென்பொருளைப் பற்றி ஏற்கனவே சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத சிலருக்காக இந்த பதிவு.

Advanced System care


இதில் Maintain Windows, Diagnose System, Utilities என்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை தேர்வு செய்து Scan கொடுத்தால் போதும். அனைத்தையும் தேடிப்பிடித்து என்னன்ன Error உள்ளது என்று காட்டிவிடும். பிறகு Fix கொடுத்தால் அனைத்து Error களையும் ஒருசில நிமிடங்களில் சரிசெய்து விடுகிறது.

இதிலேயே Spyware Removal, Registry Fix, Privacy Sweep, Junk Clean போன்ற வசதிகளும் உள்ளது.

இதில் உள்ள சிறப்புகளில் சில:

Speeds Up PC Performance and Internet Access

Quick and Extensive System Clean-up
Powerful Hard Drive Defragmentation
Defends PC Security with Extra Protection
Fixes Multiple System Errors
Extremely Easy to Use
Safe and Free

இந்த மொன்பொருளில் Disk check, Disk Cleaner, Internet Booster, Smart Ram, Smart Defrag, Shortcut fixer, Game booster போன்ற பல வசதிகள் உள்ளன. 

மேலும் IObit Security என்ற Virus Removal மென்பொருளும் வழங்கப்படுகிறது. தேவையற்ற மென்பொருளை அகற்ற Uninstaller, Start up Cleaner, windows management, windows services, network TCP/IP , unrecoverable eraser போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மென்பொருட்களை நிறுவுவதை விட இந்த ஒரு மென்பொருளை நிறுவுவதன் மூலம் நமக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்யலாம்..

மேலும் இரண்டு மடங்கு வேகமாகவும் நமது Computer இயங்கும்.
 Advanced System Care தடவிறக்க Download Here

தகவல் உங்களுக்கு பயனுள்ளதா இருக்குனு நினைச்சிங்கன்னா ஓட்டு போட்டுவிட்டு போங்க. இந்த தகவல் பலபேரை சென்றடைய உங்களுடைய ஓட்டு உதவும். 
நன்றி.

Tuesday, October 19, 2010

என்ன கொடுமை சார் இது




நேற்று காலை நாழிதளில் கண்ட செய்தி "கோவை அருகே தனியார் பேருந்துகள் சிறைபிடிப்பு". ஏண்டா சிறை பிடிச்சாங்க அப்படின்னா பயணச்சீட்டு தொகையை விட 50 பைசா அதிகமா வசூலிச்சாங்களாம். அதனால பத்திற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை சிறைபிடிச்சிருக்காங்க. இதனால போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோட அப்பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்திதான் செய்திதாள்-ல வந்துடுச்சே அதையே ஏண்டா நீயும் பதிவா போடுற அப்படின்னு சிலபேர் கேள்வி கேட்பீங்க... அதுக்கு என்கிட்ட இரண்டு காரணங்கள் இருக்கு.

  1. இந்த மாதிரியான சிறிய செய்திகள் அந்தந்த பகுதி பதிப்புகளில் மட்டுமே பிரசுரிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் வெளிவராது.
  2. இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா "பொதுமக்கள் அரசுப்பேருந்துகளை சிறை பிடிக்கவில்லை".
பொதுமக்களாகிய உங்ககிட்ட நான் கேட்கறது என்ன அப்படின்னா....
50 பைசா அதிகமா வசூலிச்சதுக்காக தனியார் பேருந்துகளை சிறைபிடித்த நீங்கள் ஏன் அரசுப்பேருந்துகளை சிறைபிடிக்கவில்லை?

அரசுப்பேருந்துகளை ஏன் சிறைபிடிக்கனும்னு கேட்கிற மக்களே கொஞ்சம் கீழே உள்ளதையும் படிங்க.



நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். கும்பகோணம் கோட்டத்திலிருந்து அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் பகுதியில் சாதாரண கட்டணம் மட்டுமே வாங்கி வந்தனர். உதாரணமாக தஞ்சையிலிருந்து திருச்சிக்கு செல்ல ரூ15.50 மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்தது. பிறகு Non – Stop, 1 to 1, 1 to 3 மற்றும் தொலைதூர பேருந்துகளான திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை செல்லும் பேருந்துகளில் "EXPRESS" அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டினாங்க. அதுக்காக ரூ.15.50 க்கு பதிலாக ரூ.18.00 வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சாதாரண நகரப்பேருந்து போல திருச்சி செல்லும் பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளில் மட்டும் அதே பழைய கட்டணமே வசூலிக்கிறாங்க.

2 நிமிஷத்திற்கு ஒரு பேருந்து வீதம் தஞ்சையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படுகிறது. EXPRESS பேருந்தில் ரூ.2.50 அதிகமா கொடுத்து விரைவா போய் சேரலாம் அப்படின்னு நீங்க நினைச்சா அது உங்களோட தப்பு. ஏன்னா தனியார் பேருந்துகள் 1 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்று சேர்ந்துவிடும். ஆனா EXPRESS பேருந்து 1 மணி நேரம் 35 நிமிடங்களில் சென்று சேரும். அரசுப்பேருந்தில் செல்லும்போது நீங்களே கவனிக்கலாம் எத்தனை தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்தை முந்திச் செல்கிறது என்று.

ரூ.15.50 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ.18.00 வசூல் செய்யப்படுகிறது ஒருசில அரசு பேருந்துகளில். 50 பைசா அதிகமா வசூலித்தற்காக தனியார் பெருந்துகளை சிறைபிடித்த மக்களே அதைவிட 5 மடங்கு ரூ.2.50 வசூலிக்கும் அரசுப் பேருந்துகளை ஏன் சிறை பிடிக்கவில்லை???

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இய்க்கப்படும் நகரப் பேருந்துகளில் கலர் கலராக வண்ணம் பூசி அதிக தொகை வசூலிக்கப்படுவதில்லை. Versatile Bus என்ற நீண்ட பேருந்துகளில் மட்டும் 50 பைசா அதிகமாக வசூலிக்கின்றனர்.



நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர்-ல வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அதனால இங்க உள்ள பிரச்சனைகளையும் சொல்லிடுறேன். நான் இங்க வந்த புதுசுல எனக்கு தெரிஞ்சு எல்லா நகரப் பேருந்துலயும் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2.00 வசூலித்தனர். இப்போ அந்த 2 ரூபாய் கட்டணத்தை தனியார் பேருந்துகளில் மட்டுமே வசூலிக்கின்றனர். காரணம் எல்லா அரசு நகரப் பேருந்துகளிலும் கலர் கலராக வர்ணம் பூசி குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை 50 பைசா உயர்திவிட்டனர். அதுவும் கோவை போன்ற பகுதிகளில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்கி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5.00 வசூலிக்கப்படுகிறது. இதைப்போன்றே மற்ற பகுதிகளிலும் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

இதைக்கண்டு ஏன் பொதுமக்களே பொங்கி எழாமல் தனியார் பேருந்துகளிடம் மட்டும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றீர்கள்? என்னைப் பொருத்த வரை கொடுக்கின்ற காசுக்கு ஒரு சுகமான பயண அனுபவமும் துரித பயணமும் தனியார் பேருந்துகளில் மட்டுமே கிடைக்கின்றது.
 

பொதுமக்களாகிய உங்களுடையே கோபம் நியாயமானதாக இருந்திருந்தால் அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கும்போதே உங்களுடைய எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்... ஏன் அப்படி செய்யவில்லை??? இத்தனை வருடமாக அரசுப் பேருந்துகள் நம்மை கொள்ளையடித்து வருகின்றன அதை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை.???

எவனோ ஒருவன் திரைப்படத்தில் மாதவன் குளிர்பானத்துக்கு 2 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக கடையை அடித்து நொறுக்குவார். அதே போன்று மக்களை ஏமாற்றுபவர்களையும், கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களையும் கண்டு பிரச்சனை செய்வார். கடைசியில் அவருக்கு ஏற்படும் முடிவு????

எல்லோரும் மக்கள் பிரச்சனைகளை தங்கள் பிரச்சனைகளாக நினைத்து போராடினால் பரவாயில்லை. எல்லோரும் சும்மா இருக்கையில் யாராவது ஒருவர் மக்கள் பிரச்சனைக்காக தலையெடுத்தாலும் தலையை எடுக்கும் தமிழகம் இது. சகித்துப் போக பழகிக் கொள்ளுங்கள் மக்களே.

(என்ன கொடுமை சார் இது!!!!!!)



என்றென்றும்,

Monday, October 18, 2010

அழகிய ஓவியங்கள்


குறிப்பு:  எதையும் பயன்படுத்தாம இருந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். அதேபோலதான் நான் எழுதாம இருந்தா என்னையும் என் ப்ளாக்கையும் மறந்து போயிடுவிங்க. அதனாலதாம் சும்மா இருக்கட்டுமே-னு இந்த ஓவியங்களை பதிவிட்டேன். இதுக்கு யாரும் மொக்கையா கருத்து சொல்லாதீங்க... அறிவுறையும் சொல்லாதீங்க. ஏன்னா அறிவுறை சொல்றது சுலபம்... அதன்படி நடப்பது கஷ்டம்.

என்றும் அன்புடன்


Wednesday, October 13, 2010

நம்பி வாங்க நல்ல இணையதளம் Bag it Today – India Today Group



வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

    இணையத்தில் பொருட்களை சலுகை விலையில் வாங்க இந்தியா டுடே நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள இணையம் Bag it today. இந்த இணையதளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆவதன் மூலம் 80% வரை குறைவான விலையில் பொருட்களை வாங்க முடியும். இந்த இணையதளத்தில் உறுப்பினர் ஆகும் ஒவ்வொருவரையும் வரவேற்கும் சலுகையாக Rs.2599/- மதிப்புள்ள Reebok Watch Rs.299/- க்கு வழங்கப்படுகிறது. நீங்கள் பணம் கட்டியும் பொருட்களை ஆர்டர் செய்யலாம் அல்லது பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்த பிறகும் பணம் செலுத்தலாம்.




முக்கியமான விஷயம் என்னவென்றால் "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" அப்படினு ஒரு பழமொழி இருக்கு. அதேதான் இங்கேயும். ஒருபொருள் இங்கே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தான் விற்கப் படுகிறது. இதுல மிகக் குறந்த விலையை BID பண்ணி குலுக்கல் முறையில் ஒருவருக்கு வழங்குவது மாதிரி கிடையாது. குறைந்த விலையில் அவங்களே தர்றாங்க. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை நீங்கள் வாங்கலாம் ஆனால் ஒரே பொருள் ஒருவருக்கு ஒன்று மட்டுமே கிடைக்கும். இந்த வார சில சலுகை பொருட்களை கீழே இணைத்துள்ள படத்தில் காணுங்கள்.


நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் 2 – 3 வாரங்களில் நம் முகவரிக்கு Blue Dart Courier மூலம் வந்து சேர்ந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் எங்கு வசிப்பவராயினும் உங்கள் வீட்டிற்கே பொருட்கள் வந்து சேரும். உங்கள் ஊருக்கு டெலிவரி வசதி உள்ளதா என்பதை இந்த இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு பரிசாக அனுப்ப நினைத்தால் அவர்களின் முகவரியை டெலிவரி பக்கத்தில் கொடுத்தால் போதும். அந்த முகவரிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். நானும் இந்த இணையதளத்தில் உறுப்பினர் ஆகி ஒரு பொருள் வாங்கியுள்ளேன். அதன் விபரம் கீழே உள்ள படத்தில்...


உங்கள் நண்பர்கள் இந்த இணையதளத்தில் இணைவதன் மூலம் ஒரு நண்பருக்கு ரூ.5 வீதம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. உங்கள் நண்பர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்கள் மூலம் ரூ.250 உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதை நீங்கள் வாங்கும் பொருட்களிலின் விலையிலிருந்து கழித்துவிட்டு மீதி பணம் மட்டும் செலுத்தினால் போதும். இந்த இணையதளத்தில் இணைய இங்கே சொடுக்கவும் BAGITTODAY


முகப்பு பக்கத்தில் Membership is Free கீழே உள்ள "மஞ்சள்" குறியிட்ட "Get a member to invite you" சொடுக்கவும். இப்போ கீழே உள்ளவாறு ஒரு பக்கம் தோன்றும்.

A Member Invite me என்ற பகுதியில் "மஞ்சள்" நிற குறியிட்ட இடத்தில் என் மின்னஞ்சல் முகவரி mani.ndu@gmail.com என்று கொடுக்கவும். (எல்லாம் ஒரு விளம்பரம்தான். நீங்க என்னோட மின்னஞ்சல் முகவரி கொடுத்தா எனக்கும் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும். உங்க நண்பர்கள் உங்க மின்னஞ்சல் முகவரி கொடுத்தா உங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்.)



பிறகு தோன்றும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விபரங்களைக் கொடுத்து உறுப்பினர் ஆகிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு விடுங்கள். அதற்கான வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் உண்டு.


என்றும் அன்புடன்